facebook pixel
chevron_right Top
transparent
வெள்ளப்பெருக்கை அடுத்து அடுத்த அதிர்ச்சி கேரளாவில் வேகமாக வற்றும் ஆறு, குளங்கள்: கடும் வறட்சி அபாயம்
16:44 திருவனந்தபுரம்: கடந்த மாதம் கேரளாவை மிரட்டிய பேய்மழையின் கோர தாண்டவத்தின் பிடியிலிருந்து கேரள மக்கள் இன்னும் மீளவில்லை. இடுக்கி, வயநாடு, எர்ணாகுளம், திருச்சூர், ஆலப்புழா மற்றும் பத்தனம்திட்டா ஆகிய 6 மாவட்டங்களிலுள்ள பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. இதனால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடு, நிலங்களை இழந்தனர். சுமார் 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். கேரளாவில் ஓடும் அனைத்து ஆறுகளும் அபாயகட்டத்தை தாண்டி வெள்ளப்பெருக்குடன் பாய்ந்தன. கேரளாவிலுள்ள பெரிய அணையான இடுக்கி அணையில், வரலாற்றில் முதல்முறையாக 5 மதகுகளும் திறக்கப்பட்டன. கேரளாவில் சிறியதும், பெரியதுமாக 50க்கும் மேற்பட்ட அணைகள் உள்ளன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App