facebook pixel
chevron_right Top
transparent
கலப்பட எண்ணெய்களால் ஆபத்து; கண்டறிந்து காப்போம் உடல் நலனை
விருதுநகர்:தேங்காய் எண்ணெய் தயாரிப்புக்கு அடி நாதமாக விளங்கும் கொப்பரை தேங்காயை இயற்கையான முறையில் தயார் செய்ய வெயிலில் காய வைத்தாலே போதும். நல்ல தரமான கொப்பரை இருந்தால் தானே சுத்தமான தேங்காய் எண்ணெய் கிடைக்கும். ஆனால் பணம் பெற எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம் என்ற சிந்தனை சில வியாபாரிகளிடமும் பரவியதால் கொப்பரையில் பட்டாசு தயாரிக்க பயன்படும் கந்தகத்தைத் தடவி இருப்புவைக்கிறார்கள்.தேங்காய் விலை ஏறும் காலத்தில் இவர்களுக்கு விலை அதிகமாக கிடைக்க இந்த முறை பயன்படுகிறது. கந்தகம்(SULPHUR) பூசப்படுவதால் கொப்பரை தேங்காய் பலமாதங்களானாலும் ஒன்றும்ஆகாது. ஒரு பொருளில் புழு , வண்டு ,பூசனம் பூத்தாலோ உயிர்த்தன்மை இருக்கிறது என்று அர்த்தம். புழு, பூச்சி அண்டாத கொப்பரையில் உயிர்த்தன்மை இருக்காது. அதுவும் கெமிக்கலில் முக்கினால் என்னவாகும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App