facebook pixel
chevron_right Top
transparent
கண்மாய்களை தத்தெடுத்து மழை நீர் சேமிப்பு ; சிவகங்கையில் ஒரு முன்னோடி கிராமம்
சிவகங்கை மாவட்டம் வேப்பங்குளம் கிராம மக்கள் மழை நீரை நான்கு கண்மாய்களில் சேமித்து நீர் மேலாண்மையில் முன்னோடியாக விளங்குகின்றனர். தமிழகத்தில் அணைகள் கட்டுவதற்கு முன்பு கண்மாய்கள், குளங்கள், ஊருணிகள் முக்கிய நீராதாரமாக விளங்கின. குடிநீர், விவசாயம் என அனைத்துக்கும் நீர் நிலைகளையே மக்கள் நம்பி இருந்தனர். இவற்றிற்கு மழை நீரே முக்கிய நீராதாரமாக இருந்தன. கிராமம், சுற்றுப்புறங்களில் சேகரிக்கப்படும் மழை நீர் கண்மாய்களுக்கு நேரடியாக அடைய வரத்து கால்வாய்கள் அமைத்தனர். அதில் கழிவு நீர் கலந்து விடாமல் பார்த்து கொண்டனர். 'கிராம ஊழியம்' செய்ய தாமாக முன் வந்து நீர் நிலைகளை பராமரித்தனர். இதனால் மழை பெய்யும் போதும், கண்மாய் உபரி நீரை வெளியேற்றும் நுட்பங்கள் அத்துபடி. அதிக மழையால் கரைகள் உடையாமல் பார்த்து கொண்டனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App