facebook pixel
chevron_right Top
transparent
சத்துணவு பணியாளர் பதவிக்கு ஆதரவாளர்களை அழைத்து வந்தால் வேலை: அதிமுகவினரிடம் அமைச்சர் பேச்சு
54:48 சத்தியமங்கலம்: தற்போது சத்துணவு பணியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணிகளுக்காக காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நமது ஆதரவாளர்களை அழைத்து வந்தால் பணிநியமனத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என அமைச்சர் அதிமுகவினரிடம் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக சார்பில் வாக்குசாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளரும், சுற்றுச்சூழல்துறை அமைச்சருமான கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினார். அப்போது அவர், அதிமுகவினரிடம் பேசியதாவது:. நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரை நம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேரலாம். எப்படி இருந்தாலும் 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம். தற்போது சத்துணவு பணியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் பணிகளுக்காக காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App