facebook pixel
chevron_right Top
transparent
வயநாட்டில் நக்சல்கள் நடமாட்டம் நீலகிரி மாவட்ட எல்லையில் பலத்த பாதுகாப்பு
58:20 ஊட்டி: வயநாட்டில் நக்சல்கள் நடமாட்டத்தை தொடர்ந்து நீலகிரி-கேரள எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் குறிப்பாக, தமிழக-கேரள எல்லைகளில் நக்சல்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வயநாடு மாவட்டத்தில் உள்ள ஒரு எல்லையோர கிராமத்தில் நேற்று முன்தினம், ஆயுதம் ஏந்திய நக்சல்கள் வந்து மளிகை சாமான்கள் வாங்கிச் சென்றதாகவும், அப்போது அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வழங்கியும், கையால் எழுதிய போஸ்டர்கள் ஒட்டியும் சென்றுள்ளனர். இதையடுத்து, நீலகிரி எல்லைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் அதிரடிப்படையினர் மற்றும் நக்சல் ஒழிப்பு படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்' என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App