facebook pixel
chevron_right Top
transparent
சீருடையில் நடந்து சென்ற ஆயுதப்படை காவலரிடம் செல்போன் பறிப்பு: 4 பேர் கைது
59:40 சென்னை: மந்தைவெளி சாலையார் தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (24). சென்னை மாநகர காவல்துறையில் ஆயுதப்படை காவலர். இவர், கடந்த 2ம் தேதி வீட்டின் அருகே சீருடையில் நடந்து சென்றபோது பைக்கில் வந்த 3 பேர், இவரது விலை உயர்ந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். விசாரணையில், ஓட்டேரி எஸ்.வி.எம் நகரை சேர்ந்த வெங்கேடசன் என்கிற மஞ்சப்பை (20), பெரம்பூர் சுப்ரமணிய பாரதியார் 3வது குறுக்கு தெருவை சேர்ந்த மேகா சூர்யா என்ற பேய் குழந்தை (20), கஸ்தூரிபாய் நகர் கெனால் பேங்க் சாலையை சேர்ந்த சரவணன் (20) ஆகியோர் செல்போன் பறித்தது தெரிந்தது. இவர்களையும், இவர்களது கூட்டாளி ஓட்டேரி ஸ்டேன்ட்ஸ் சாலையை சேர்ந்த 17வயது சிறுவனையும் கைது செய்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App