facebook pixel
chevron_right Top
transparent
எடப்பாடி வரும் நேரத்தில் இவரு இருந்தால்... எஸ்.ஐ.யை கண்டு மிரளும் எஸ்.பி.
05:41 குமரி மாவட்ட குற்றப்பிரிவில் சப் இன்ஸ்பெக்டராக இருப்பவர் முத்துமாரி. இவர் பணியாற்றும் இடங்களில் எல்லாம் சர்ச்சையில் சிக்கி இடமாற்றம் செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. குமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழியில் தொடங்கி சுசீந்திரம், வடசேரி, கோட்டார் என பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றி உள்ளார். பணியாற்றிய இடங்களில் எல்லாம் ஆபாச பேச்சால் சர்ச்சையில் சிக்கியதுடன் மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் பெரும் சிக்கலை உருவாக்கியவர் ஆவார். பா.ஜ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளை ஆபாசமாக பேசி ஏற்கனவே எஸ்.பி.யாக இருந்த மணிவண்ணன், தர்மராஜன் ஆகியோர் இவரால், பெரும் அவமானத்துக்கு உள்ளானார்கள். இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆனால் கடந்த 10ம் தேதி நடந்த முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி ரோந்து பணி இவருக்கு வழங்கப்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App