facebook pixel
chevron_right Business
transparent
வாராக் கடன் வசூல் இலக்கு ரூ.1.50 லட்சம் கோடி
மத்­திய அரசு, நடப்பு நிதி­யாண்­டில், 1.50 லட்­சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூ­லிக்­கு­மாறு, பொதுத் துறை வங்­கி­க­ளுக்கு இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.இது, கடந்த நிதி­யாண்டு வசூ­லித்த வாராக் கடனை விட, இரு மடங்கு அதி­கம். இந்­தாண்டு மார்ச்­சு­டன் முடிந்த, 2017 -- 18ம் நிதி­யாண்­டில், இந்­திய வங்­கித் துறை­யின் வாராக் கடன், 10.25 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, வங்­கித் துறை அளித்த கடன்­களில், 11.8 சத­வீ­த­மா­கும்.கடந்த நிதி­யாண்­டில் மட்­டும், வாராக் கடன், 3.13 லட்­சம் கோடி ரூபாய் அதி­க­ரித்­துள்­ளது.பொதுத் துறை­யைச் சேர்ந்த, 21 வங்­கி­க­ளின் வாராக் கடன், 8.97 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App