facebook pixel
chevron_right Politics
transparent
ஈரோடு ம.தி.மு.க. மாநாட்டில் தீர்மானம்: திமுக தலைமையிலான அணியில் சேர்ந்து பாஜ, அதிமுக அரசுகளை வீழ்த்துவோம்: வைகோ தியாகத்துக்கு துரைமுருகன் பாராட்டு
53:20 ஈரோடு: திமுக தலைமையிலான அணியில் சேர்ந்து பா.ஜ.க., அ.தி.மு.க. அரசுகளை வீழ்த்துவோம் என்று ம.தி.மு.க. மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தந்தை பெரியார்-அண்ணா பிறந்தநாள், ம.தி.மு.க. வெள்ளி விழா, வைகோ பொதுவாழ்வு பொன்விழா ஆகிய முப்பெரும் விழா மாநாடு, ஈரோட்டில் நேற்று நடந்தது. மாநாட்டுக்கு மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். மாநாட்டை கட்சியின் பொருளாளர் கணேசமூர்த்தி திறந்து வைத்தார். கட்சி கொடியை துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் ஏற்றி வைத்தார். தந்தை பெரியார் சுடரை புலவர் செவந்தியப்பன், அண்ணா சுடரை செஞ்சிமணி ஆகியோர் ஏற்றி வைத்தனர். தந்தை பெரியார் படத்தை திருப்பூர் துரைசாமி, அண்ணா படத்தை பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் திறந்து வைத்தனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App