facebook pixel
chevron_right Politics
transparent
குற்றவாளி என்ற முள்ளை எடுக்காமல் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா கேட்பது அரசியல் நாடகம்: திவாகரன் பேட்டி
55:57 மன்னார்குடி: அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் நேற்று, மன்னார்குடியில் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பேரறிஞர் அண்ணாவின் சொற்பொழிவுகளை தமிழக அரசு தொகுத்து அண்ணாவின் சாதனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்க அவற்றை பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டும். அண்ணாவின் பெயரை சொல்லி கட்சி நடத்துபவர்கள் லஞ்ச லாவண்யங்களை தவிர்த்து நேர்மையான அரசியலை முன்னெடுக்க வேண்டும். குற்றவாளி என்கிற முள்ளோடு ஜெயலலிதா சமாதியில் உள்ளார். அவரின் பெயரில் ஆட்சி நடத்துகிறோம் என சொல்பவர்கள் அந்த முள்ளை அகற்ற முயற்சிக்காமல் ஜெயலலிதாவுக்கு 'பாரத ரத்னா' விருது கேட்பது அரசியல் நாடகம்.திருவாரூர் தொகுதிக்கு ஏராளமான நலத் திட்ட உதவிகளை கருணாநிதி செய்துள்ளார். அதனால் அத்தொகுதி மக்கள் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கே நன்றி கடனோடு வாக்களிப்பார்கள்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App