facebook pixel
chevron_right Politics
transparent
அதிமுக மாஜி அமைச்சர் டிடிவி கட்சியில் இணைந்தார்
56:29 திருச்சி: அதிமுக மாஜி அமைச்சர் செ.தாமோதரன் நேற்று டிடிவி தினகரன் கட்சியில் இணைந்தார். அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு அமமுக துணை பொது செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று மாலை அணிவித்தார். இதில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன். அதிமுகவை சேர்ந்த இவருக்கு விவசாய பிரிவு இணை செயலாளர் பதவியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வழங்கி இருந்தனர். இந்நிலையில் நேற்று காலை திருச்சி வந்த தாமோதரன் சங்கம் ஓட்டலுக்கு சென்று, டிடிவி.தினகரனை சந்தித்து அவரது கட்சியில் இணைந்தார். பின்னர் அண்ணா சிலைக்கு சென்ற ஊர்வலத்திலும் தாமோதரன் கலந்து கொண்டார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App