facebook pixel
chevron_right Sports
transparent
முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி இறுதி போட்டியில் இன்று ரயில்வே ஐஓசி மோதல்
முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் ரயில்வே - ஐஓசி அணிகள் இன்று மோதுகின்றன. எழும்பூர், மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதலாவது அரை இறுதியில் ரயில்வே விளையாட்டு வாரியம் - பஞ்சாப் & சிந்து வங்கி அணிகள் நேற்று மோதின. தொடக்கம் முதலே ஒருங்கிணைந்து விளையாடி தாக்குதல் நடத்திய ரயில்வே அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து பஞ்சாப் & சிந்து வங்கி அணியை திணறடித்தனர். இடைவேளையின்போது ரயில்வே அணி 2-0 என முன்னிலை வகித்தது. 3வது மற்றும் 4வது கால் மணி நேர ஆட்டத்திலும் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அந்த அணி மேலும் 2 கோல் திணித்து அசத்தியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App