facebook pixel
chevron_right Sports
transparent
முஷ்பிகுர் 144 ரன், மிதுன் 63 ரன் விளாசல் இலங்கை அணிக்கு 262 ரன் இலக்கு: பந்துவீச்சில் மிரட்டினார் மலிங்கா: முஷ்பிகுர் ரகிம் 144 ரன் 150 பந்து 11 பவுண்டரி 4 சிக்சர்
துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் தொடக்க லீக் ஆட்டத்தில் இலங்கை அணியுடன் மோதிய வங்கதேசம் 262 ரன் இலக்கை நிர்ணயித்தது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் இலங்கை - வங்கதேசம் மோதின. டாசில் வென்ற வங்கதேச அணி முதலில் பேட் செய்தது. தமிம் இக்பால், லிட்டன் தாஸ் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். லசித் மலிங்கா வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் லிட்டன் தாஸ், 6வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் டக் அவுட்டாகி வெளியேற, வங்கதேச அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App