facebook pixel
chevron_right Top
transparent
ஆன்லைன் மூலம் நடந்த விமானப்படை அதிகாரி தேர்வை ஹேக்கிங் செய்த 2 பேர் கைது: 6 லட்சம் வரை லஞ்சம்
33:03 ரோட்டாக்:ஆன்லைன் மூலம் நடந்த விமானப்படை அதிகாரி தேர்வை ஹேக்கிங் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய விமானப்படைக்கு குறுகிய கால அதிகாரிகள் தேர்வு செப்டம்பர் 13, 16ம் தேதிகளில் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அரியானா மாநிலம், ரோட்டாக் நகரில் இந்த ேதர்வை ஹேக்கிங் செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. அங்குள்ள தேர்வு மையத்தின் கீழ் பைபர் கேபிள் சென்றது. இதை பார்த்த அதிகாரிகள் ஆய்வு செய்த போது அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதை கண்டுபிடித்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App