facebook pixel
chevron_right Top
transparent
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு: புதிய தந்திரி பொறுப்பு ஏற்கிறார்
33:58 திருவனந்தபுரம்: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பக்தர்கள் கோயிலுக்கு சிரமமின்றி செல்லலாம் என தேவஸம்போர்டு அறிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மாதம் ெபய்த பேய் மழையால் சபரிமலையில் கடுமையான சேதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் சபரிமலையில் நடந்த நிறை புத்தரிசி பூஜை, ஆவணி மாத பூஜை மற்றும் ஓண பூஜைகளுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக டாடா நிறுவன உதவியுடன் பம்பையில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பம்பையில் பக்தர்கள் செல்லும் பாலத்தின் அடி பகுதியில் தேங்கி கிடந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டது. இதனிடையே, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் சபரிமலை செல்ல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App