facebook pixel
chevron_right Top
transparent
உடல்நிலை தொடர்ந்து பாதிப்பு: கோவா முதல்வர் பாரிக்கர் டெல்லி எய்ம்சில் அனுமதி: பதவி விலக மோடியிடம் விருப்பம்
36:20 புதுடெல்லி: கோவா முதல்வராக பாஜ.வை சேர்ந்த மனோகர் பாரிக்கர் உள்ளார். இவர் கணையம் தொடர்பான பிரச்னையால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அமெரிக்கா சென்ற அவர் 3 மாதங்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த வாரம் கோவா திரும்பிய அவர், வடக்கு கோவாவில் உள்ள கன்டோலிம் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், உடல் தொடர்ந்து பாதிக்கப்பட்டதால் நேற்று டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருவதால், முதல்வர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக பிரதமர் மோடியிடமும், பா.ஜ தலைவர் அமித்ஷாவிடமும் பாரிக்கர் கூறியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதிய முதல்வரை பாஜ தேர்ந்தெடுக்கும் என்று கூறப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App