facebook pixel
chevron_right Top
transparent
சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை மோடி தொடங்கி வைக்கிறார்
37:02 கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை வரும் 23ம் ேததி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 30 கிமீ தொலைவில் பாக்யாங்கில் மாநிலத்தின் முதல் விமான நிலையம் அமைக்கப்பட்டு, அதற்கான வெள்ளோட்டங்கள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டன. இந்த விமான நிலையத்தை வரும் 23ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக மாநில தலைமை செயலாளர் ஏ.கே.வஸ்தவா நேற்று தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சிக்கிம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி 2வது முறையாக வரும் 23ம் தேதி வருகிறார். அப்போது, புதிய விமான நிலையத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார் என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App