facebook pixel
chevron_right Top
transparent
கன்னியாஸ்திரி பலாத்கார வழக்கில் நெருக்கடி ஜலந்தர் பிஷப் பொறுப்புகள் வேறு பாதிரியாரிடம் ஒப்படைப்பு: 19ம் தேதி விசாரணைக்கு ஆஜராகிறார்
43:17 திருவனந்தபுரம்: பலாத்கார வழக்கில் நெருக்கடி முற்றியதை அடுத்து பிஷப் பிராங்கோ தனது பொறுப்புகளை வேறொரு பாதிரியாரிடம் ஒப்படைத்தார். கன்னியாஸ்திரி பலாத்கார புகார் தொடர்பாக வரும் 19ம் தேதி நேரில் விசாரணைக்கு ஆஜராக பிஷப் பிராங்கோவுக்கு போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர். இதுகுறித்து வாடிகனில் உள்ள போப் அலுவலகத்திற்கும் தகவல் அனுப்பப்பட்டது. இதைதொடர்ந்து பிஷப் பிராங்கோ விவகாரத்தில் வாடிகன் தரப்பிலும் நடவடிக்ைக எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு சில தினங்களில் பிஷப் பிராங்கோ பதவியில் இருந்து விலகுவதற்கு வாடிகனில் இருந்து கடிதம் அனுப்பப்படும் என தகவல் வெளியானது. பிஷப் பொறுப்பில் இருக்கும்ேபாதே போலீசார் ைகது செய்தால் பிஷப் பதவிக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால் அவரை பதவியை விட்டு விலக வாடிகனில் இருந்து நிர்பந்தம் தரப்பட்டுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App