facebook pixel
chevron_right Top
transparent
லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தி மல்லையாவை தப்ப விட்டது மோடியின் ஆதரவு அதிகாரி: ராகுல் காந்தி அடுத்த குற்றச்சாட்டு
44:52 புதுடெல்லி: விஜய் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தியது மோடியின் செல்வாக்கால் சிபிஐ.யில் நுழைந்த ஏ.கே.சர்மாதான் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். ராகுல் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது; சி.பி.ஐ.யின் இணை இயக்குனரான ஏ.கே. சர்மா, மல்லையாவுக்கு அளிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீசை பலவீனமடைய செய்து உள்ளார். இது மல்லையா தப்பி செல்ல அனுமதித்து விட்டது. குஜராத்திலிருந்து சிபிஐ.க்கு வந்த இந்த அதிகாரி, மோடியின் செல்வாக்கை பெற்றவர். பஞ்சாப் நேசனல் வங்கி கடன் மோசடியில் தொடர்புடைய வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ஆகியோர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வகுத்த திட்டத்திற்கும் இந்த அதிகாரியே பொறுப்பு ஆவார். சி.பி.ஐ.யின் விசாரணை அதிர்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App