facebook pixel
chevron_right Top
transparent
நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயம்
45:28 புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான நிதி பற்றாக்குறை இலக்கு 3.3 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, நிதியமைச்சகத்தின் பல்வேறு துறைகளுடன் நேற்று சீராய்வு கூட்டம் நடத்தினார். கூட்டத்துக்கு பிறகு, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி அளித்த பேட்டியில், நடப்பு 2018-19 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிட்டதுபோல், மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு ஆண்டில் 7.2% முதல் 7.5% ஆக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நிதிப்பற்றாக்குறை, மூலதன செலவு இலக்கிலும் உறுதியாக உள்ளோம். வருமான வரி வசூல் அபாரமாக இருக்கிறது. வரி வருவாய் ஆதாரம் பெருகி வருகிறது. இதனால் பட்ஜெட் இலக்கை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App