facebook pixel
chevron_right Top
transparent
புராஜெக்ட்டுக்காக எடுத்து சென்றபோது காருக்குள் விஷவாயு கசிந்து என்ஐடி மாணவர் பரிதாப சாவு: ஓசூர் அருகே பரிதாபம்
47:34 ஓசூர்: ஓசூர் அருகே காருக்குள் விஷவாயு கசிந்து என்ஐடி மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்-பாகலூர் ரோட்டில் உள்ள நகரை சேர்ந்தவர் ஹரிநாத். இவர், திருச்சியில் உள்ள என்ஐடியில் பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி புராஜெக்ட் சம்பந்தமாக பெங்களூருவில் இருந்து தன்னுடைய காரில் கார்பன் மோனாக்சைடு ரசாயன வாயு சிலிண்டரை எடுத்துக்கொண்டு ஓசூருக்கு புறப்பட்டார். இந்த சிலிண்டர் சுமார் ஒரு அடி உயரம் கொண்டது. இரவு நேரத்தில் தனியாக வந்ததால், மாணவனின் தந்தை அடிக்கடி ரக்‌ஷித்திற்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார். கடைசியாக ஓசூர் எல்லைக்கு வந்துவிட்டதாக ரக்‌ஷித் கூறியுள்ளார். அதன்பின்னர் அவரை தொடர்பு கொண்டபோது, போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த ஹரிநாத், மகனை தேடத் தொடங்கினார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App