facebook pixel
chevron_right Top
transparent
விநாயகர் சிலை ஊர்வலத்தை தடுத்த போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம்: 'இந்துக்கள் என்ன அனாதையா?' என ஆவேசம்
48:20 திருமயம்: திருமயம் அருகே போலீசார் தடையை மீறி விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே மெய்யபுரம் கிராமம் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் நேற்று நடந்தது. ஊர்வலத்தின்போது, 'சர்ச் வழியாக விநாயகர் சிலையை எடுத்துச் செல்லாமல், நாங்கள் சொல்லும் வழியில் கொண்டு செல்லுங்கள்' என ேபாலீசார் கூறினர். இதற்கு விநாயகர் சிலை அமைப்பினர் மறுத்து விட்டனர். இதன் காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். தேசிய செயலாளர் எச்.ராஜா சம்பவ இடத்திற்கு வந்து ஊர்வலத்துக்கு தடை போட்ட பொன்னமராவதி டி.எஸ்.பி. தமிழ்மாறன், திருமயம் இன்ஸ்பெக்டர் மனோகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App