facebook pixel
chevron_right Top
transparent
திருவலம் கிளினிக்கில் சிறுவன் சாவு: காரில் சடலத்தை போட்டு விட்டு ஓடிய அரசு டாக்டருக்கு வலை
50:09 திருவலம்: திருவலம் கிளினிக்கில் அறுவை சிகிச்சை செய்ததால் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுதொடர்பாக டாக்டர் மீது வழக்குப்பதிந்து அவரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த கார்ணாம்பட்டு ஊராட்சி ஆழ்வார்த்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், வெல்டர். இவர்களது மகன் கரண்குமார்(11), 6ம் வகுப்பு மாணவன். சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்ட கரண்குமாரை திருவலம் பஜார்வீதியில் ஜீவன் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வரும் வாலாஜா அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அச்சுதனிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அழைத்துச்சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் அச்சுதன், கரண்குமாரின் சிறுநீரகத்தில் கல் இருப்பதால், நேற்று முன்தினம் கிளினிக்கில் அறுவை சிகிச்சை செய்ய மருந்துகள் செலுத்தியபோது திடீரென அவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App