facebook pixel
chevron_right Politics
transparent
அரசு பள்ளிகளை மூடக் கூடாது: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
33:59 சென்னை : மாணவர்கள் சிரமத்திற்கு உட்படும் வகையில் பள்ளிகளை இணைக்கவோ, மூடவோ கூடாது என்று தமாக தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வியை ஊக்கப்படுத்தவும், அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், மாணவ, மாணவிகளை அரசுப் பள்ளிகளுக்கு ஈர்க்கவும் தொடர்ந்து நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால் மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என்ற காரணத்தை கூறி சுமார் 3 ஆயிரம் பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு எடுத்திருப்பதாக வெளிவரும் செய்திகள் வேதனைக்குரியது. தமிழகத்தில் அரசால் இயக்கப்படும் பள்ளிகளுக்கு முழு பொறுப்பும் தமிழக அரசுக்குத் தான் உண்டு. அதே நேரத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் நிதியுதவியும் முக்கியம் தான்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App