facebook pixel
chevron_right Politics
transparent
பாஜக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை: மகளிர் காங். தலைவர் குற்றச்சாட்டு
39:16 சென்னை : பாஜ ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்று மகளிர் காங்கிரஸ் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.மகளிர் காங்கிரஸ் அமைப்புக்கு தனி கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜான்சிராணி, மத்தியில் பாஜ அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த நான்கு ஆண்டுகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லதா நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் கூட பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். தமிழகத்திலும் இதே நிலைதான் உள்ளது. எனவே பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் என்றார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App