facebook pixel
chevron_right Top
transparent
நிதி பற்றாக்குறை: ஜெட்லி விளக்கம்
"வருமான வரி வசூல் அதிகரிப்பு, அரசின் பங்குகள் விற்பனை ஆகியவை எதிர்பார்த்ததைவிட சிறப்பான முறையில் இருப்பதால், நடப்பு நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை இலக்கில் எந்த மாற்றமும் இல்லை," என, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். நிதி அமைச்சகத்தின் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்துக்குப்பின், மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.2 முதல், 7.5 சதவீதம் இருக்கும் என, பட்ஜெட்டில் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அந்த இலக்கையும் தாண்டுவோம் என, எதிர்பார்க்கிறோம். வருமான வரி வசூல் அதிகரித்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App