facebook pixel
chevron_right Top
transparent
கோவாவில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பா.ஜ., தீவிரம்! : பரீக்கர் உடல் நலம் பாதிப்பால் திடீர் திருப்பம்
கோவா முதல்வர், மனோகர் பரீக்கர், 62, உடல் நலம் பாதிக்கப்பட்டு, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார். பரீக்கருக்கு மாற்றாக, புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில், பா.ஜ., தீவிரமாக உள்ளது. கோவாவில், முதல்வர் மனோகர் பரீக்கர் தலைமையிலான, பா.ஜ., கூட்டணி அரசு அமைந்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், ராணுவ அமைச்சராக இருந்த பரீக்கர், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பின், கோவா முதல்வராகப் பொறுப்பேற்றார்.சிறு கட்சிகளுடன் இணைந்து, பா.ஜ., மீண்டும் ஆட்சியில் அமர்ந்தாலும், கடந்த சில மாதங்களாகவே, முதல்வர் பரீக்கருக்கு, அடிக்கடி உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற அவர், கடந்த வாரம் நாடு திரும்பினார். விமர்சனம் : இதற்கிடையே, மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு நாட்களுக்கு முன்,.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App