facebook pixel
chevron_right Top
transparent
மண்டல பூஜைக்கு நடை திறப்பதற்கு முன் சபரிமலையில் சீரமைப்பு பணிகள் நிறைவடையுமா?
19:14 திருவனந்தபுரம்: கடந்த மாதம் கேரளாவில் பெய்த பேய் மழை அந்த மாநிலத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தி சென்றுவிட்டது. மழை நின்று சில வாரங்கள் ஆகிவிட்ட போதிலும் கேரள மக்கள் மழையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னும் மீளவில்லை. ஆலப்புழா மாவட்டத்திலுள்ள குட்டநாடு பகுதியில் ஏராளமான வீடுகள் 3 மாதங்களுக்கு மேலாக இன்னும் வெள்ளத்தில் மிதக்கின்றன. இடுக்கி, வயநாடு, திருச்சூர் உட்பட பல மாவட்டங்களில் பெரும்பாலான சாலைகள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டன. மொத்தத்தில் ₹30 ஆயிரம் கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார். இந்த பேய் மழை சபரிமலையையும் விட்டு வைக்கவில்லை. குறிப்பாக பம்பை பகுதி முழுவதும் வெள்ளத்தால் உருக்குலைந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App