facebook pixel
chevron_right Top
transparent
தலைமை தேர்தல் ஆணையர் கருத்து தேர்தலில் பண துஷ்பிரயோகத்தை தடுக்க போதிய சட்டங்கள் இல்லை
27:54 புதுடெல்லி: "தேர்தலில் கருப்பு பண துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு போதுமான சட்டங்கள் இல்லை" என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் கவலை தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடந்த 'இந்திய தேர்தல் ஜனநாயகத்தின் சவால்கள்' என்ற கருத்தரங்கில் தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் பங்கேற்று பேசியதாவது: பொய் செய்தியை பரப்புதல், சில விஷயங்களை வலுக்கட்டாயமாக நம்ப வைத்தல், தகவல் திருட்டு, தகவல் தொடர்புகளை குறிவைத்து தாக்குதல் போன்றவை உலகின் ஒவ்வொரு ஜனநாயக நாடும் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களாக உள்ளன. இங்கு நம் நாட்டில் வலுவான சைபர் பாதுகாப்பு, தகவல் பாதுகாப்பு மூலம் கேம்பிரிட்ஜ் அனால்டிகா போன்ற தகவல் திருட்டு சம்பவங்கள், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் போன்றவை தடுக்கப்படுகிறது. ஆனாலும், பண துஷ்பிரயோகம் நம் நாட்டிற்கும், தேர்தலுக்கும் முக்கிய கவலையாக உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App