facebook pixel
chevron_right Top
transparent
லஷ்கர், ஹிஸ்புல் அமைப்பை சேர்ந்த 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: காஷ்மீரில் பாதுகாப்பு படை அதிரடி
29:18 காஷ்மீர்: காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரின் சவ்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு நேற்று காலை பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். வீரர்களின் பதில் தாக்குதலில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள் லஷ்கர், ஹிஸ்புல் தீவிரவாத அமைப்பினர். அவர்களிடம் இருந்து பல்வேறு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட பகுதியில், பாதுகாப்புப் படையினரை நோக்கி அப்பகுதி இளைஞர்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் வீசிய கண்ணீர்புகை குண்டு மற்றும் துப்பாக்கிச்சூட்டில் 10 இளைஞர்கள் காயமடைந்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App