facebook pixel
chevron_right Top
transparent
கேள்விக்குறியாகும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு கொடூர பாலியல் வக்கிரங்கள் அரங்கேறும் சேலம் மண்டலம்:
19:29 சேலம்: சேலம் மண்டலத்தில் கொடூரமான பாலியல் வக்கிரங்கள் தொடர்ந்து அரங்கேறுவதால், பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.தமிழகத்தில் சேலம் மண்டலத்தில், ஒரு காலத்தில் பெண் சிசுக்கொலை சம்பவங்கள் அதிகம் நடந்தது. தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகளுக்கான அரசின் பல்வேறு சலுகைகள் குறித்த விழிப்புணர்வால், இந்த அவலம் கட்டுக்குள் வந்தது. அதே நேரத்தில் இந்த மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இளம் வயது திருமணங்கள் அதிகளவில் நடந்தது. இதனை அரசும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தீவிரமாக கண்காணித்தது. இது போன்ற அதிரடியால் இளம்வயது திருமணங்களும் பெருமளவில் கட்டுக்குள் வந்தது. இதற்கிடையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில், பெண் சிசுக்களின் பிறப்பு விகிதம் சரிந்தது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App