facebook pixel
chevron_right Top
transparent
ஆபத்து வருமுன் விழிக்குமா அரசு? நிலத்தடி நீர் உறிஞ்சுவதில் தமிழகம் முதலிடம்
19:31 கோவை: நிலத்தடி நீரை உறிஞ்சுதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆபத்து வருமுன் தமிழக அரசு விழித்துக்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இந்த ஆண்டு போதிய அளவில் தென்மேற்கு பருவமழை பெய்திருந்தாலும், குடிநீர்கோரி அங்கொன்றும், இங்கொன்றுமாக மக்கள் காலிக்குடங்களுடன் மறியல் போராட்டம் நடத்தும் நிலை நீடிக்கிறது. வேளாண் பாசனத்துக்கு 3-ல் 2 பங்கு பேர், நிலத்தடி நீரையே நம்பியுள்ளனர். தமிழகத்தில் 60 சதவீத பகுதிகளில் நிலத்தடி நீர், மின்மோட்டார்கள் மூலமாக அதிகளவில் உறிஞ்சப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் நிலத்தடி நீர் உறிஞ்சும் நிலை தொடர்கிறது. இருப்பினும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசின் நிலத்தடி நீர் வாரியம் ஆண்டுதோறும் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டு வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App