facebook pixel
chevron_right Top
transparent
தூய்மை சேவை, கடவுளுக்கு செய்யும் சேவை! : சத்குருவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
"துாய்மை சேவை, கடவுளுக்கு செய்யும் சேவை போன்றது," என, பிரதமர் மோடி, கோவை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவுடன், காணொலிக் காட்சியில் நேற்று கலந்துரையாடினார். மத்திய அரசின், 'துாய்மையே சேவை' எனும் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, துாய்மை விழிப்புணர்வு குறித்து பிரதமர் மோடி, சத்குருவுடன் காணொலிக் காட்சியில், கோவை ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை முன், கலந்துரையாடினார். சத்குரு பேசியதாவது: துாய்மை பாரதம் திட்டத்தால், நான்கு ஆண்டுகளில், நமது நாட்டில் சிறப்பான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதைக் கண்டு மகிழ்கிறேன். துாய்மை பாரதம் திட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில், மக்களின் பங்களிப்பு சிறப்பாக உள்ளது. தமிழகம் முழுவதும், 50 லட்சம் கழிப்பறைகளை தமிழக அரசு கட்டிக் கொடுத்துள்ளது. மேலும், பள்ளிகளில் புதிய கழிப்பறை கட்டவும், பராமரிக்கவும், 60 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App