facebook pixel
chevron_right Top
transparent
பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் நிம்மதி : உயர்கல்விக்கு 2ம் ஆண்டு மதிப்பெண் போதும்
பிளஸ் 2 மாணவர்கள் நிம்மதி அடையும் விதமான, புதிய அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் நேற்று வெளியிட்டார். "உயர் கல்வி படிப்புகளில் சேர, பிளஸ் 2 மதிப்பெண்களே போதும்; பிளஸ் 1 மார்க், கணக்கில் எடுக்கப்படாது," என, அவர் அறிவித்துள்ளார். பிளஸ் 1 வகுப்புகளுக்கு, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், முதல் முறையாக, பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதில், பெரும்பாலான மாணவர்கள், குறைந்த மதிப்பெண்களே பெற்றனர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 என தொடர்ச்சியாக, மூன்று ஆண்டுகளுக்கு, அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டி இருப்பதால், மாணவர்கள், கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். 600 மதிப்பெண்கள் : எனவே, பிளஸ் 1 மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்துவதை, மறுபரிசீலனை செய்யக்கோரி, அரசு தேர்வுகள் இயக்ககத்திற்கு மனுக்கள் வந்தன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App