facebook pixel
chevron_right Top
transparent
முதல்வர் துவக்கிய ஆன்லைன் திட்டம்சி.எம்.டி.ஏ., அதிகாரிகளால் முடக்கம்
சி.எம்.டி.ஏ.,வில், திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' முறையில் பெற்று பரிசீலிப்பதற்காக, முதல்வர் துவக்கி வைத்த திட்டம், அதிகாரிகளால் பயன்படுத்தப்படாமல், பாதியில் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.சென்னை பெருநகர் பகுதியில், புதிய கட்டுமான திட்டங்களை மேற்கொள்வோர், அதற்கான விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து, இணைப்பு ஆவணங்கள், கட்டணத்துடன், நேரடியாக அளிக்க வேண்டும்.இதில், விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்ய, தனிப் பிரிவு உள்ளது. இத்திட்டத்தின் செயல்பாடு குறித்த ஆறு கேள்விகள், சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர், துணை தலைவர், துறை செயலர் ஆகியோருக்கு இ - மெயில் வாயிலாக அனுப்பப்பட்டன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App