facebook pixel
chevron_right Top
transparent
வேலையில்லாத, விரக்தியடைந்த இளைஞர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்
வேலைவாய்ப்பு இல்லாத, விரக்தியடைந்த வாலிபர்களால், பாலியல் குற்றங்கள் நடந்து வருவதாக பாஜக பெண் எம்.எல்.ஏ. கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ரேவாரி பகுதியில் மாணவி ஒருவர் 12 நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஹரியானா மாநில பா.ஜ.க. தலைவரும், உச்சானா கலான் பெண் எம்.எல்.ஏ.-வுமான பிரேமலதா, வேலையில்லாதவர்கள் மற்றும் விரக்தியடைந்த இளைஞர்கள், கற்பழிப்பு போன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார். பாலியல் சம்பவம் தொடர்பாக சண்டிகரில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா, 'இளைஞர்களில் பலர் வேலையில்லாமலும், விரக்தியடைந்தும் உள்ளனர். அவர்கள் சமூகத்தில் மிகவும் மோசமான இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்று கூறினார். இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App