facebook pixel
chevron_right Top
transparent
காலம் கடந்த கடிதத்துக்கு பரிசு!
மேட்டுப்பாளையம்;தேசிய அஞ்சல் வார விழாவை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அஞ்சல் நிலையத்தில் பழமையான கடிதங்கள், ஸ்டாம்புகள் கண்காட்சி நடந்தது. தபால் தலைகள் சேகரிப்பு நாளை முன்னிட்டு, மேட்டுப்பாளையம் அஞ்சல் நிலையத்தில் அஞ்சல் தலைகள் கண்காட்சியும், பழைய கடிதங்கள் கண்காட்சியும் நடந்தன. விழாவுக்கு மேட்டுப்பாளையம் அஞ்சல் அலுவலக அதிகாரி சுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில், 'காலம் கடந்த கடிதங்கள்' என்ற தலைப்பில், 36 பேர் பழைய கடிதங்களையும், தந்திகளையும் பார்வைக்கு வைத்தனர்.இதில், 1904ம் ஆண்டு வரை பழமயைான கடிதங்களை இடம்பெற்றன. கண்காட்சியில் பழமையான ஸ்டாம்புகள் முதல் தற்போது வெளியிட்ட ஸ்டாம்புகள் வரை வைக்கப்பட்டன. மேட்டுப்பாளையத்தில் உள்ள, 12 பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கண்காட்சியை பார்வையிட்டனர். அஞ்சலக ஊழியர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஸ்டாம்பு சேகரிப்பின் முக்கியத்துவம் பற்றி விளக்கினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App