facebook pixel
chevron_right Top
transparent
தெய்த்துத் தேய்ந்த மெஷின்கள்: ஆல்டர் ஆடர்களால் உத்வேகம்!
கை கொஞ்சம் 'லோ'வாகவே இருக்கட்டும்' பர்சேஸ்க்கு பெயர்போன ஒப்பணக்கார வீதி அருகே, உப்புகிணர் சந்தில் இப்படி ஒரு குரலை கேட்கவே மணிக்கணக்காக காத்துக்கொண்டிக்கின்றனர் ஒரு குழுவினர்!. தெய்த்து தெய்த்து பல ஆண்டுகளாக தேய்ந்து போன தையல் மெஷின். உப்புக்கிணர் சந்தின் பரபரப்பான கடைகளுக்கிடையே, வெட்ட வெளியில், 15 பேருக்கும் மேல் வரிசை கட்டி அமர்ந்த படி, பர்சேஸ் முடித்து வருபவர்களை வரவேற்று கொண்டிருக்கின்றனர் அந்த தையல் கலைஞர்கள். அவர்களைப் பார்த்ததும், ஏதோ பண்டிகை கால மொத்த தையல் ஆடர்களை ஆள் வைத்து தைக்கின்றனர் என நினைத்தால் அது தவறு. இவர்களது அதிகபட்ச ஆடர்களே, புத்தாடைகளை, 'ஆல்டர்' செய்வது, கையில்லா ஆடைகளை கை வைத்து தருவது போன்றவைதான்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App