facebook pixel
chevron_right Top
transparent
புதிய பாலத்தில் போக்குவரத்து துவக்கம்
தேவதானப்பட்டி, 'தினமலர்' செய்தி எதிரொலியாக, குள்ளப்புரம் வழித்தடத்தில் கட்டப்பட்ட புதிய ஓடைப்பாலம் வழியாக நேற்று மாலைபோக்குவரத்து துவங்கியது. ஜெயமங்கலம் -குள்ளப்புரம் வழித்தடத்தில்ஓடையின் குறுக்கே புதிதாகநான்கு பாலங்கள் கட்டப்பட்டன. வேலை முடிந்து ஒருமாதம் ஆன நிலையில் பாலத்தில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்திற்கு தடை ஏற்படுத்தினர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாகஜெயமங்கலம், குள்ளப்புரம், சிந்துவம்பட்டி, கோவில்புரம் கிராமங்களில் மழை பெய்து வருகிறது. இதனால்புதிய பாலம் கட்ட அமைக்கப்பட்ட மாற்றுப்பாதை சேறும், சகதியுமாக மாறியது. இதன் வழியாக சென்ற இரு சக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இது குறித்து 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக புதிய ஓடைப்பாலங்களில் இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, நேற்று மாலை அவற்றின் வழியாக போக்குவரத்து துவங்கியது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App