facebook pixel
chevron_right Top
transparent
கல்வி புரவலர் திட்டம்: களமிறங்குமா பள்ளி மேலாண்மை குழு?
கோவை;அரசுப்பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகளை, மேம்படுத்த கைக்கொடுக்கும், கல்வி புரவலர் நிதி திட்டத்தில், உறுப்பினர் சேர்க்கும் பணிகளில், பள்ளி மேலாண்மை குழு, களமிறங்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது. அரசுப் பள்ளிகள் மீதான பொதுவான கருத்து, தற்போது மாறி வருகிறது. குழந்தைகளுக்கு, திணிப்பில்லாத கல்வியை அளிக்க, அரசுப் பள்ளிகளே சிறந்தவை என, இன்றைய தலைமுறை பெற்றோர் எண்ணுகின்றனர். இதற்கு ஏற்ப, புதிய சிலபஸ் தயாரிக்கும் பணிகளும், வேகமாக நடக்கின்றன. கற்றல், கற்பித்தல் முறைகளை மாற்றினாலும், கட்டமைப்பு வசதிகள் பொறுத்தமட்டில், அரசுப் பள்ளிகள் பின்தங்கிய நிலையிலே உள்ளன. போதுமான கழிப்பறை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் கூட முழுமையடையாத நிலையில் உள்ளன.மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கினாலும், கட்டமைப்பு வசதிகள் பொறுத்தமட்டில், தன்னிறைவு பெற முடியவில்லை.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App