facebook pixel
chevron_right Top
transparent
சுகாதாரக்கேடு புகார்:729 வீடுகளுக்கு நோட்டீஸ்
செப்., மாதம், 284 வீடுகள்; அக்., மாதத்தில் இதுவரை, 127 பேருக்கு, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. கடந்த ஜன., மாதம் முதல், ஆக., வரையிலான, எட்டு மாதங்களில், 318 பேரையும் சேர்த்து, இதுவரை, 729 வீடுகள், நிறுவனங்களுக்கு, சுகாதாரக்கேடு தொடர்பாக விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.இது குறித்து, மாநகர சுகாதாரப்பிரிவினர் கூறுகையில்,நோட்டீஸ் பெற்றவர்களின் வீடு, நிறுவனம் தூய்மை குறித்து கண்காணிக்கப்படும். கொசு பரவல் தடுப்பு பணியை துவங்காவிடில், கோர்ட்டில் குற்றவியல் நடவடிக்கையும், இந்திய தண்டனை சட்டம், 269ன் கீழ் கூடுதல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், 3ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,' என்றனர். விரைவில், வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், நவ., மாதத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App