facebook pixel
chevron_right Top
transparent
தீபாவளி சலுகைகள் அறிவிப்பில் போன் நிறுவனங்கள் போட்டி
தீபாவளியை முன்னிட்டு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு, போட்டி போட்டு சலுகைகளை வாரி வழங்குகின்றன. தொலைத்தொடர்பு நிறுவனங்ளுக்கு இடையே, 'ஜியோ'வின் வருகைக்குப் பின், கடும் போட்டி நிலவி வருகிறது. அதுவரை, 28 நாள் பயன்பாடு உடைய, ஒரு ஜி.பி., 'இன்டர்நெட் டேட்டா'வை, 260 - 292 ரூபாய்க்கு விற்ற, 'ஏர்டெல்' உள்ளிட்ட சில நிறுவனங்கள், ஒரு நாளுக்கு, ஒரு ஜி.பி., டேட்டாவை, இலவசமாக தர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.இந்தச் சூழலில், தீபாவளி நெருங்குவதால், வாடிக்கையாளர்களை கவர, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன. பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 15ம் தேதி வரை, 160 ரூபாய்க்கு, 'ரீசார்ஜ்' செய்தால், முழு, 'டாக் டைம்' வழங்குகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App