facebook pixel
chevron_right Top
transparent
மூளைச்சாவு: வாலிபர் உடலுறுப்பு தானம்
மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது. மதுரை மேலுாரை சேர்ந்த பிச்சை மகன் அழகுமணிகண்டன், 18. தீபாவளிக்கு சொந்த ஊர் வந்தார். அக்.,9 ம் தேதி நண்பருடன் அண்ணாநகர் அருகே டூவீலரில் சென்றபோது, எதிரே வந்த ஆட்டோ மோதி விபத்திற்கு உள்ளானார். அக்.,10 ம் தேதி மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில். சிகிச்சையின் போதே மூளைச்சாவு அடைந்தார். பெற்றோர் சம்மதத்துடன் மூளைச்சாவு அடைந்த. சிறுநீரகம், இதயம், நுரையீரல், கல்லீரல். இதையடுத்து, 5 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கு சிறுநீரகம், கல்லீரல் பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சி அப்பல்லோ மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் மருத்துவமனை, நுரையீரல், இதயத்தை சென்னை மருத்துவமனைக்கு வழங்கினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App