facebook pixel
chevron_right Top
transparent
டெங்கு விழிப்புணர்வு:மாணவர் தூய்மை பணி
அனுப்பர்பாளையம்;மாநகராட்சி மற்றும் முயற்சி' மக்கள் அமைப்பு இணைந்து, திருப்பூரில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தின.ஏ.வி.பி., கல்வி அறக்கட்டளை சேர்மன் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் அசோகன், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் முன் துவங்கிய ஊர்வலம், மருதாச்சலபுரம், குமரானந்தபுரம், வழியாக புது பஸ் ஸ்டாண்டை அடைந்தது. இதில் ஏ.வி.பி., ரேவதி நர்சிங் காலேஜ், அன்னை மெட்ரிக் பள்ளி, சக்தி பில்டர்ஸ், கோவை பப்ளிக் பள்ளி, குமரன் நர்சிங் காலேஜ், வித்யா மந்திர் பள்ளி, டி.கே.டி., பள்ளிகளின் மாணவர்கள் பங்கேற்று, வீடுவீடாக சென்று, டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வினியோகித்தனர்.தொடர்ந்து, புது பஸ்டாண்டை சுத்தம் செய்து, பயணிகளுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டது; விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App