facebook pixel
chevron_right Top
transparent
டெங்கு ஒழிப்பு பணி கண்காணிப்பாளர் நியமனம்: ஆய்வுக்கு வருகிறார் ஐ.ஏ.எஸ்., அதிகாரி
திருப்பூர் மாவட்டத்தில் நடக்கும் டெங்கு ஒழிப்பு பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலராக, கால்நடை பராமரிப்புத்துறை அரசு செயலர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அளவில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களும் டெங்கு பீதியால், நோயில் இருந்து தப்பிக்க, தடுப்பு முறைகளை கையாண்டு வருகின்றனர். பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படாததால், பாதிப்பு தொடர்ந்து வருகிறது. சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்பினரும், நோய் தடுப்பு பணிக்காக, அபேட்' மருந்து தெளிக்கும் பணியை செய்கின்றனர். கொசு மற்றும் கொசுப்புழுக்களை அழிக்க ஏதுவாக, கொசுப்புகை மருந்து அடிப்பது நகர்ப்புறத்தில் மட்டும் நடக்கிறது. மாவட்டத்தில் இதுவரை, 300க்கும் அதிகமானவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆங்காங்கே டெங்கு காய்ச்சல் பலி எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App