facebook pixel
chevron_right Top
transparent
பி.எட்., கல்லூரிகளுக்கு பல்கலை எச்சரிக்கை
'பி.எட்., கல்லுாரிகளில், ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் கூடாது' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும், 650க்கும் மேற்பட்ட பி.எட்., கல்லுாரிகள், ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் செயல் படுகின்றன. பி.எட்., கல்லுாரிகளில், ஆசிரியர்கள் நியமனத்தில் விதிமீறல் உள்ளதாகவும், தகுதியான ஆசிரியர்கள் இல்லை என்றும் புகார் எழுந்துள்ளன. இந்நிலையில், இக்கல்லுாரிகளுக்கு, பல்கலையின் பொறுப்பு பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் அனுப்பிய சுற்றறிக்கை: கல்லுாரிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு, ஏழு நாட்களுக்குள், பல்கலைக்கு தெரிவிக்க வேண்டும். புதிய ஆசிரியர்கள் நியமனத்துக்கு, கட்டாயம் அனுமதி பெற வேண்டும். ஆசிரியர்களின் கல்வித்தகுதி, அனுபவம், பணிபுரிந்த நிறுவனங்கள், ஆதார், வங்கி கணக்கு விபரங்களை, பல்கலையில் தாக்கல் செய்ய வேண்டும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App