facebook pixel
chevron_right Top
transparent
பேரிடர் குறைப்பு தினம் விழிப்புணர்வு பேரணி
உடுமலையில் பன்னாட்டு பேரிடர் குறைப்பு தினத்தையொட்டி, வருவாய்த்துறை மற்றும் கல்லுாரி மாணவர்கள் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தாலுகா அலுவலகத்தில் துவங்கிய பேரணியை, கோட்டாட்சியர் அசோகன் துவக்கி வைத்தார். தாசில்தார் தங்கவேல் முன்னிலை வகித்தார். பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய அவசர கால தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பலகைகளை ஏந்தியபடி, வித்யாசாகர் கல்லுாரி, மாணவ, மாணவியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முக்கிய வீதிகளின் வழியாக பேரணி சென்றது. தீயணைப்பு நிலைய அலுவலர் நாகராஜன், துணை தாசில்தார் ராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App