facebook pixel
chevron_right Top
transparent
துவக்க பள்ளிகளுக்கு கலைத்திருவிழா:21 போட்டிகள் நடத்த திட்டம்
உடுமலையில், மாணவர்களுக்கான கலைத்திருவிழா குறித்து துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.உடுமலையில், அரசு உத்தரவின்படி, கல்வித்துறையின் சார்பில், அனைத்து பள்ளி மாணவர்களுக்குமான கலைத்திருவிழா அக்., 30, 31 மற்றும் நவ., 1ம்தேதி நடக்கிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பிரிவுக்கு போட்டிகள் நடத்த அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் நியமிக்கப்பட்டுள்ளது. துவக்கப்பள்ளிகளுக்கான போட்டிகள் ஆர்.கே.ஆர்., கிரிக்ஸ் பள்ளியில் நடக்கிறது. போட்டிகளில் பங்கேற்க, பதிவு செய்வது மற்றும் அனைத்து விபரங்களையும் தெளிவுபடுத்த, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார் வரவேற்றார். உதவித் தொடக்கக்கல்வி அலுவலர் பிரிட்டோ தலைமை வகித்தார். திருமூர்த்திநகர் மாவட்ட கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தன் பார்வையிட்டார். கூட்டத்தில், 140 பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App