facebook pixel
chevron_right Top
transparent
விடுப்பை தவிர்க்கும் போக்குவரத்து ஊழியர்கள் :பொதுமக்கள் வரவேற்பு
உடுமலைவிடுமுறை நாட்களில், மக்களின் சிரமத்தை தவிர்க்க, அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள், தாமாக முன்வந்து பணியாற்ற உள்ளனர்.தமிழக அரசு போக்குவரத்து கழகம், சென்னை நகரம், புறநகர், விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, குடந்தை, திருநெல்வேலி, விரைவு போக்குவரத்து கழகம் ,(சேலம்) என கோட்டங்களை கொண்டுள்ளது. மாவட்டங்கள் தோறும் மண்டல அலுவலகம், அவற்றின் கீழாக, மாநிலம் முழுவதுமாக, 310 கிளை அலுவலகங்கள் செயல்படுகின்றன. அவற்றில் இருந்து, டவுன் பஸ்கள், மொபசல், எக்ஸ்பிரஸ், அல்ட்ரா டீலக்ஸ், ஏ.சி., பஸ்கள் என, 21 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதிகாரிகள், அலுவலர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள், மெக்கானிக், தற்காலிக ஊழியர்கள், என, 1.29 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிகின்றனர்.இந்நிலையில், இம்மாதம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App