facebook pixel
chevron_right Top
transparent
உடுமலையில் தொடர் மழை: மக்கள் மகிழ்ச்சி :வடிகால்களை மீட்க வலியுறுத்தல்
உடுமலை;உடுமலையில் இரண்டாவது நாளாக பெய்த மழையால், வெப்பம் விடைபெற்று, குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு மாறியதால், மண்ணும், மக்கள் மனமும் குளிர்ந்தது. பேரிடர் மேலாண்மைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அரசுத்துறையினர், சில முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டால், மழைக்காலம் அனைவருக்கும் இனிமையாக அமையும். உடுமலை பசுமை பகுதியாக திகழ, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையே ஆதாரமாக உள்ளது. இரு மழையிலும், பயன்பெற்றதால், நீண்ட கால பயிராக தென்னையும், பிற சாகுபடிகளும், விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை கைவிட்டதால், குளிர்ந்த சீதோஷ்ண நிலைக்கு பெயர் பெற்ற உடுமலை வறட்சி பகுதியாக மாறியது.இந்நிலையில், கடந்த இரு நாட்களாக, நகரம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App